Sunday 24 March 2013

லேடீஸ் ஸ்பெஷல்


வணக்கம் மக்களே...

பெண் பதிவர்களுக்காக இந்த இடுகையை டெடிகேட் செய்கிறேன். சீனியர் பதிவர்கள் என்ற காரணத்தினால் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா, அன்புடன் ஆனந்தி, காகித ஓடம் பத்மா, இந்திராவின் கிறுக்கல்கள், கவுசல்யா, தேனம்மை லக்ஷ்மணன், தோழி பிரஷா, அன்புடன் அருணா, என் வானம் அமுதா, வானதி ஆகியோரை இந்த இடுகையில் தவிர்த்துவிட்டேன்.

1. Geetha's Womens Special http://udtgeeth.blogspot.com/
பலதரப்பட்ட இடுகைகள் எழுதியிருந்தாலும் அட்வைஸ் ரக இடுகைகள் ரசிக்க வைக்கின்றன. அதுவும் பெண்களுக்கே அதிகமாக அட்வைஸ் செய்கிறார். டீன் ஏஜ் பெண்களுக்காக என்ன அட்வைஸ் சொல்கிறார் என்று கேளுங்கள். மேலும், இளம்பெண்களிடம் ஈகோ வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறார்.

முன்னவரைப் போலவே இவரும் பெண்களுக்காக ஒரு அட்வைஸ் சொல்கிறார். பெண்கள் என்றாலே அட்வைஸ் தான் போல. குறிப்பாக கல்யாண பெண்களுக்காக ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். அவரது வீட்டு பணியாள் குறித்து எழுதப்பட்ட எங்க வீட்டு மலைஸ் இடுகையும் ரசிக்க வைக்கிறது.

3. புதிய வசந்தம் http://puthiyavasantham.blogspot.com/
இவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம். ரிலாக்ஸ் கவிதை என்ற பெயரில் கவிதையும் எழுதியிருக்கிறார். கலங்க வைக்கும் விலைவாசி பற்றி கவலையும் படுகிறார். அதேசமயம் வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று சொல்லித்தரவும் செய்கிறார்.

4. அவ(ரை)னை நினைத்த நொடிகள்... http://avanidamnaan.blogspot.com/
தன்னுடைய காதலைப் பற்றியும் காதலரைப் பற்றியும் எழுதுவதற்காகவே வலைப்பூ ஆரம்பித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவரது காதலரும் ஒரு பதிவர்தான். பிள்ளையார் சுழி போட்டு காதலை ஆரம்பித்த கதையை சொல்லியிருக்கிறார் கேளுங்கள். இவர்கள் வித்தியாசமாக கொண்டாடிய காதலர் தினக்கொண்டாட்டம் கலியுக காதலர்களுக்கு ஒரு முன்னாதரணம்.

5. பூமகளின் பூக்களம் http://poomagal.blogspot.com/
திரைவிமர்சனங்கள் எழுதும் பெண்பதிவர் என்ற முறையில் இவர்மீது அதிகப்படியான மரியாதை உள்ளது. தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல் உள்ளூரிலிருந்து உலகம் வரை பொளந்து கட்டுகிறார். தமிழ் சினிமா விமர்சனங்களில் பூவும், பாலிவுட் விமர்சனங்களில் தாரே ஜமீன் பர் படமும், ஹாலிவுட் விமர்சனங்களில் அவதாரும் அதிகம் ரசிக்க வைத்தன.

6. மலைச்சாரல் http://harininathan.blogspot.com/
பெரும்பாலும் கவிதைகளால் நிறைக்கப்பட்ட ஒரு வலைப்பூ. அவ்வப்போது கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ணக்கூடாது என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார். நவீன சுயம்வரம் பற்றி கவிதை ஒன்றை வடித்திருக்கிறார் பாருங்கள்.

7. மிடில் கிளாஸ் மாதவி http://middleclassmadhavi.blogspot.com/
இவரும் ஒரு ஆல்-ரவுண்ட் பர்பாமன்ஸ் காட்டும் பென்பதிவரே. சவால் சிறுகதை போட்டிக்காக இவர் எழுதியிருக்கும் சவாலே சமாளி சிறுகதை பிரமிக்க வைக்கிறது. இங்கே ஒரே இடுகையில் புத்தக விமர்சனம், எழுத்தாளர் பாலகுமாரனின் வலையுலக அபிப்ராயம் கடி ஜோக் என்று கதம்பம் தொகுத்திருக்கிறார் பாருங்கள்.

8. மைத்துளிகள்... http://maiththuli.blogspot.com/
இவர் ஒரு பதிவர் அல்ல, எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அது ஏன் என்பது இவருடைய வலைப்பூவில் நுழைந்ததும் உங்களுக்கே புரியும். இவரது இடுகைகளில் துரு துரு துப்பாண்டி எனும் இடுகை என்னுடைய பேவரிட். மேலும், 2010ம் ஆண்டில் இவரது ஹீரோ யாரென்று சொல்கிறார் கேளுங்கள்.

9. வள்ளுவம் http://valluvam-rohini.blogspot.com/
இவருக்கு அறிமுகம் தேவைப்படாது என்றேண்ணுகிறேன். பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை சந்தித்த அனுபவத்தை நான் சந்தித்த வி.ஐ.பி. என்ற பெயரில் சிலாகித்து எழுதியிருக்கிறார். நம் தேசத்தலைவர்களுக்கு இது தேவையா...? என்று சமூகக்கோபம் காட்டவும் செய்கிறார். இவரது மாதொரு வலைப்பூவில் ஹியூமர் கிளப் அனுபவங்கள் பற்றி எழுதியிருக்கிறார் அதையும் படியுங்கள்.

10. ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com/
அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு பெண் பதிவர். பதிவுகளை காட்டிலும் பின்னூட்டங்களுக்காக அதிகம் ரசிக்கப்படுபவர். ஆண்களே! இது உங்களுக்கான பதிவு...:))) என்று சொல்லி என்ன எழுதியிருக்கிறார் என்று படியுங்கள். கள்ளக்காதல் சில...!! நொறுங்கும் இதயம் பல...!! என்று சீரியஸாக சொல்கிறார். கூடிய விரைவில் கவுண்டமணி செந்தில் ரசிகர் மன்றத்திற்க்காக அதிரடி நகைச்சுவை தருவதற்கு தயாராக இருக்கிறார் என்பது எக்ஸ்க்ளுசிவ் நியூஸ்.

டிஸ்கி 1: பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக சகோதரிகள், தாய்மார்கள் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.

டிஸ்கி 2: எங்கேயாவது மேடம், அக்கா வகையறா சொலவடைகளை தவற விட்டிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz