Thursday 28 March 2013

புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆஸ்பிரின் மாத்திரைகள்



புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆஸ்பிரின் மாத்திரைகள்
ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக்
கொண்டால் புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என தற்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பீட்டர் மெக்குலம் புற்றுநோய் மைய
விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவு குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், உடலில் உள்ள நிணநீர்
சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் தான் புற்றுநோய் வேகமாக பரவுகிறது. ஆஸ்பிரின்
மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் சுரக்கும் நிணநீரின்
தன்மையை கட்டுப்படுத்துகிறது. அதனால் புற்றுநோய் வேகமாக பரவுவது தடுக்கப்படுகிறது
என்றனர்.
மேலும் மார்பக புற்றுநோய் போன்றவற்றிக்கு தொடக்க காலத்திலேயே ஆஸ்பிரின் மாத்திரை
சாப்பிட்டால் அவை மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நுரையீரல், மூளை மற்றும் தொண்டை புற்றுநோயை பரவாமலும் ஆஸ்பிரின் தடுக்கும் என்றும்
கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz