Monday 11 March 2013

பிளாக்கரில் விட்ஜெட்களைக் காட்ட மறைக்க - அற்புதமான ஆறு வகை நிரல்வரிகள்...!!!

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/05/how-to-hide-and-show-widgets-in-blogger.html
வணக்கம் நண்பர்களே..! தொடர்ந்து தங்கம்பழனி வலைத்தளத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி. பிளாக்கரில் தளங்களை அழகுப்படுத்த நிறைய தொழில்நுட்பங்கள்,
நிரல்கள் வரிகள் இருக்கின்றன. லட்சக்கணக்கான வலைத்தளங்களில் இத்தகைய நுட்பங்களை அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம் மனதை கவர்ந்த வலைப்பூக்களின் வடிவமைப்பிலேயே நமது வலைத்தளமும் அமைந்தால் நன்றாக இருக்குமே? என்று நாம் நினைப்போம்.


இன்றைய பதிவிற்கு வருவோம். பிளாக்கர் தளங்களில் விட்ஜெட்கள்(Widgets) அல்லது Gadget களை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய Widget -களை
  1. முகப்பு பக்கத்தில் மட்டும் தெரியுமாறு வைப்பது எப்படி? 
  2. Static Page என்று சொல்லக்கூடிய நிரந்தப் பக்கங்களில் மட்டும் தெரியும்படி கொண்டு வருவது எப்படி? 
  3. நிரந்தர பக்கங்களில்(Status page) விட்ஜெட்களை மறைப்பது எப்படி? 
  4. முகப்பு பக்கத்தில் விட்ஜெட்களை மறைப்பது எப்படி? 

இப்படி ஆறு விதமான கேள்விகளுக்கு இப்பதிவின் மூலம் தீர்வு காணலாம் வாருங்கள்..!!

1. widget-களை முகப்பு பக்கத்தில் மட்டும் காட்ட
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
WIDGET நிரல்வரிகள் இங்கு இடம்பெற்றிருக்கும் 
</b:if>
2. WIDGET-களை முகப்பு பக்கத்தில் மட்டும் மறைக்க
<b:if cond='data:blog.pageType == "item"'>
WIDGET நிரல்வரிகள் இங்கு இடம்பெற்றிருக்கும் 
</b:if>
3. Static Pages பக்கங்களில் மட்டும் விட்ஜெட்டை காட்ட
<b:if cond='data:blog.pageType == "static_page"'>
WIDGET நிரல்வரிகள் இங்கு இடம்பெற்றிருக்கும் 
</b:if>
4. Static Pages பக்கங்களில் மட்டும் விட்ஜெட்டை மறைக்க
<b:if cond='data:blog.pageType != "static_page"'>
WIDGET நிரல்வரிகள் இங்கு இடம்பெற்றிருக்கும் 
</b:if>
5. ஒரு குறிப்பிட்ட இடுகைக்கு மட்டுமே விட்ஜெட்களைக் காட்ட விரும்பினால்
<b:if cond='data:blog.url == "URL OF Selected Post"'>
WIDGET நிரல்வரிகள் இங்கு இடம்பெற்றிருக்கும்
</b:if>
6. ஒரு குறிப்பிட்ட இடுகைக்கு மட்டுமே விட்ஜெட்களைக் மறைக்க விரும்பினால்
<b:if cond='data:blog.url != "URL OF Selected Post">
WIDGET நிரல்வரிகள் இங்கு இடம்பெற்றிருக்கும் 
</b:if>
இதைப்போலவே பிளாக்கருடன் வரும் மற்ற archieve, labels போன்ற அனைத்து விட்ஜெட்களையும் நாம் விரும்பிய பக்கத்தில் காட்டவும், மறைக்கவும் முடியும். அனைத்து விட்ஜெட்களையும் காட்டவும், மறைக்கவும் செய்ய வேண்டியது இதுதான்.
  • உங்கள் பிளாக்கரில் லாகின் ஆகிக்கொள்ளுங்கள். 
  • Design==>Edit Html==> சென்று உங்கள் வலைப்பூவின் வார்ப்புருவை (blogger template)-Download full template என்பதைச் சொடுக்கி ஒரு பேக்அப் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு Expand widget template என்பதை சொடுக்கிக்கொள்ளுங்கள். 
  • இப்போது நீங்கள் மறைக்க வேண்டிய விட்ஜெட் அல்லது காட்ட விரும்பிய விட்ஜெட்டை கண்டுபிடிக்க வேண்டும். 

நீங்கள் உங்கள் விட்ஜெட்டுக்கு பெயர் வைத்திருந்தால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதாவது நம் தளத்தில் உள்ள "நண்பர்களோடு இணைய" என ஃபாலோவர் விட்ஜெட்டுக்கு தலைப்பு வைத்திருக்கிறோம். "பிடிச்சிருந்தா "+1" கிளிக் பண்ணுங்க" இதைப்போன்ற தலைப்புகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அல்லது widgetId -ஐ வைத்தும் கண்டுபிடிக்கலாம். இதற்கு உங்களுடைய விட்ஜெட்டை Edit கொடுத்து அட்ரஸ்பாரில் இறுதியாக உள்ள விட்ஜெட் ஐ.டி யைக் குறித்துக்கொண்டு, உங்கள் வார்ப்புருவில் Ctrl+F கொடுத்து கண்டு பிடிக்கலாம்.இந்த முறையை விட தலைப்பை வைத்து கண்டுபிடிப்பது சுலபம்.

நிரல்வரிகளைப் பயன்படுத்தும் முறை.
<b:widget id='HTML' locked='false' title='விட்ஜெட் தலைப்பு' type='Profile'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
இங்கு விட்ஜெட்டிற்கான நீண்ட நிரல்வரிகள் இருக்கும்.
</b:if>
</b:includable> 
</b:widget>
மேற்கண்ட நிரல்வரிகள் தான் ஒரு விட்ஜெட்டிற்கான முழு உள்ளடக்க நிரல்வரிகள்.
இதில்<b:includable id='main'> என்பதற்கு அடுத்து உங்களுடைய கண்டிஷன்(if) நிரல்வரிகளை <b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>இணைக்க வேண்டும். அதற்கு அடுத்து </b:includable> என்ற நிரல்வரிக்கு மேலே </b:if> என்ற கண்டிஷன் முடிவு வரிகளை இணைக்க வேண்டும். 


இவ்வாறு மேற்கண்ட 6 பயன்மிக்க நிரல்வரிகளையும் நீங்கள் உங்கள் வார்ப்புருவில் விட்ஜெட்களை காட்ட, மறைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 IF கண்டிஷன் நிரல்வரிகள் சேர்க்கப்பட்ட ஒரு முழு விட்ஜெட்டின் நிரல்வரிகள்
<b:widget id='HTML2' locked='false' title='பிடிச்சிருந்தா +1 கிளிக் பண்ணுங்க' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
  <!-- only display title if it's non-empty -->
  <b:if cond='data:title != &quot;&quot;'>
    <h2 class='title'><data:title/></h2>
  </b:if>
  <div class='widget-content'>
    <data:content/>
  </div>
  <b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>
பிடிச்சிருந்தா +1 கிளிக் பண்ணுங்க இந்த விட்ஜெட்டானது Home பேஜில் மட்டுமே தெரியும். மற்றப் பக்கங்களில் மறைந்துவிடும். இதுபோல நீங்களும் உங்கள் தேவையான பக்கங்களில் , தேவையான விட்ஜெட்களைக் காட்டலாம். மறைக்கலாம்.
குறிப்பு: கணினி மொழிகள் கற்றவர்களுக்கு if condition என்பதைப் பற்றித் தெரிந்திருக்கும். இந்த நிபந்தனை நிரல்வரிகளைப் பயன்படுத்தியே பிளாக்கர் தளத்தில் விட்ஜெட்டை காட்ட, மறைக்க 6 நிரல்வரிகளனைத்தும் எழுதப்பட்டுள்ளது. 


இந்த தகவல் உங்களுக்கு எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததா? அப்படியெனில் பதிவைப்பற்றிய கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். புரியாதவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்த பதிவும், பதிவில் உள்ள தகவலும் மற்றவர்களுக்கும் பயன்படும் என நீங்கள் நினைத்தால் Face book, google +, Twitter போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். 


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz