Saturday 16 March 2013

பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா

http://anbhudanchellam.blogspot.in/2010/03/blog-post_4231.htmlபதிவு எழுதுபவர்களில் 50% பேர் கணினி அறிவு சிறிது குறைவாகவே உள்ளது. புதியவர்கள் தங்களுடைய பிளாக்கினை அழகு படுத்த பல GADGET, TEMPLATE ஆகியவைகளை மாற்ற நினைப்பார்கள்.
அவர்களுக்காக தான் இந்த பதிவு இதில் பிளாக்கருக்கு தேவையான அடிப்படை தேவைகளை எப்படி சரி செய்வது என்று நாம் காண போகிறோம்.


1. உங்கள்  பிளாக்கரை டவுன்லோட் செய்ய :
நம்முடைய பிளாக்கரில் நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவுகள்  திடீரென இல்லை என்றால் எப்படி இருக்கும். இது நடப்பதற்கு வாய்ப்புகள் பல உண்டு அதனை தவிர்க்க நாம் நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது. நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் செய்ய Dassboard- layout- Edit html - Download Full Template- சென்று செய்து கொள்ளவும். தேவைபட்டால் படத்தை பார்த்து கொள்ளுங்கள் 


2. டெம்ப்ளேட்டை மாற்ற( TEMPLATE CHANGE) :  
     நம்முடைய பிளாக்கரில் Default ஆக வரும் template பார்ப்பதற்கு சிறிது வசதி குறைவாகவே இருக்கும். நாம் அதை எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம்.
முதலில் உங்களுக்கு தேவையான template இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.  டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்   .
     டவுன்லோட் செய்தவுடன் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
DASSBOARD - LAYOUT - EDIT HTML - என்ற பகுதிக்கு செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழ்காணும் விண்டோ போல வரும். 
மேலே உள்ள விண்டோ போல வந்ததும் Choose File என்பதை கிளிக் செய்து உங்கள் பைலை தேர்ந்தெடுக்கவும். பின்பு அதற்கு அருகில் உள்ள upload என்ற பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல  Warning message  வரும் அதில் keep widget என்பதை க்ளிக் செய்து விடவும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.   
அவ்வளவு தான் உங்கள் பிளாக்கின் template மாற்ற பட்டிருக்கும் 

3. Word Verification 
இது நம்முடைய பார்வையாளர்கள் நம்முடைய பதிவை பார்த்து விட்டு அந்த பதிவை பற்றி அவர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களின் வழியாக நமக்கு தெரிவிப்பார்கள். அப்படி தெரிவிக்கும் போது நம்முடைய பிளாக்கரில் தேவையில்லாமல் அந்த எழுத்துக்கள் வந்து எரிச்சலை தரும் இது நம் வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும். ஆகையால் அதை எப்படி நம்முடைய பிளாக்கரில் நீக்குவது என்று பாப்போம்.
படத்தில் காட்டியுள்ளது போல் நீங்கள் செய்தால் உங்களுடைய பிளாக்கரில் WORD VERIFICATION நீங்கி விடும்.  

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz