Thursday 28 March 2013

மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு



மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம், மூட்டு வலியால்
பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

உடல் எடை அதிகமாக உள்ளதே இதற்கு பொதுவான காரணங்களாக உள்ளது என்றும்
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் தான் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், கை, கால் மூட்டுக்களில் வலி
ஏற்பட காரணமாக உள்ளது. அதிக அளவில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் இந்த நோய்களினால்
தாக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைக்க சில
உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதேபோல் நடைபயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளையும் நீரிழிவு நோயாளிகள்
கடைபிடிக்கின்றனர். இது உடல் பருமனை குறைப்பதற்காகத்தான்.
ஆனால் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க
முடியாது. கை, கால்களில் ஏற்படும் வலிகளினால் எரிச்சலும், சோர்வும் ஏற்படும்.
தொடக்கத்தில் வலி ஏற்பட்டாலும் உடற்பயிற்சி, நடப்பது, நீச்சல் போன்றவற்றை
மூட்டுவலி, நீரிழிவு இரண்டும் சேர்ந்த நோயாளிகள் கைவிடக் கூடாது என்கின்றனர்
மருத்துவர்கள்.
மூட்டுவலி உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது நடைப்பயிற்சியில் ஈடுபட
வேண்டும். 10 நிமிடங்கள் என்று ஆரம்பித்து 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். உடல்
எடை குறைந்தால் மூட்டுவலியும் குறையும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz