Tuesday 5 March 2013
கிரிக்கெட் பற்றிய தகவல்கள் அறிய உதவும் இணையதளம்
http://usilampatti-chellappa.blogspot.in/2009/10/blog-post_6525.html
உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் உடனே அதனைப் பார்க்கும் அனைவரும் ஏதாவது ஒரு உலக சாதனை அங்கு நடைபெறாதா என ஏங்கு கின்றனர்.
ஏனெனில், அது நடந்தபோது தாங்கள் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தோம் என்பது முதல் திருப்தி.
அடுத்ததாக, அவரவருக்குப் பிரியமான கிரிக்கெட் வீரர் என்ன சாதனை புரியப்போகிறார் என்ற எதிர் பார்ப்பு.
அதுமட்டுமின்றி, கிரிக்கெட் என்றாலே மிகச் சாதாரணமான கேள்விகள் முதல் மிகவும் குழப்பமான நிலை குறித்த கேள்விகள் வரை எழுவது இயல்பும் எதிர் பார்ப்புமாகும். இந்த எதிர்பார்ப்பினை நிறைவு செய்துகொள்ள, ஒருவர் இதற்கு முன் ஏற்படுத்திய சாதனைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? அது மட்டுமின்றி, இன்று கிரிக்கெட் குறித்து அனைவரும் ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பினரிடமும் இருக்கிறது.
விளையாட்டு தொடர்பான அலுவலர் பணிகளுக்குப் போட்டியிடுபவர்கள் இது , குறித்து நிச்சயம் அறிந்திருக்க வேண்டுமே. அந்த வகையில் கிரிக்கெ விளையாட்டினைப் பொறுத்த வரை நமக்கு உதவிடும் தளம் ஒன்று http://howstat.com.au/cricket/home.asp என்ற முகவரியில் உள்ளது.
இதன் முகப்புப் பக்கத்தில், இன்றைக்கு உலக அளவில் நடக்கும் போட்டி குறித்த தகவல்கள், எதிர்பார்க்கும் சாதனைகள் ஆகியன குறித்த விபரங்கள் தரப்படுகின்றன. அத்துடன் இந்தத் தளம் ஒரு கிரிக்கெட் தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகையில் தகவல் கேட்டாலும் அதற்கான அனைத்துத் தகவல்களும் இங்கே உள்ளன.
ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களின் விவர பட்டியலும் விரிவாக கிடைக்கிறது. நாடுகள் வாரியாக, அந்த அந்த நகரங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் வாரியாக, அனைத்து பிரிவு விளை யாட்டு வீரர்களின், பெட்டிங், போலிங் பிரி வுகளில் தனித்தனியாக, அவர்களின் விளையாட்டு வரலாறு, தலைமைப் பதவி ஏற்று விளையாடிவர்கள், விலக்கப்பட்ட வர்கள், 20/20 போட்டி, விக்கட் காப்பாளர்கள், உலகக்கோப்பைப் போட்டி என அனைத்து வகைக ளிலும் பிரித்து, பின் அவற்றிலும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு ள்ளன.
இந்த இணைய தளத்தில் மட்டும் தேடிப்பார்க்க ஸேர்ச் பொக்ஸ் தரப்பட்டுள்ளது. இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், அவ்வப்போது இது அப்டேட் செய்யப் படுவதுதான். மேலும் பலர் கிரிக்கெட் குறித்து எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளும் இதில் உள்ளன. நீங்களும் எழுதி அனுப்பினால் தரமிருந்தால் இந்த தளத் தில் பிரசுரிப்பார்கள். இந் தத் தளத்தினை தென் அவுஸ்திரேலியா வில் சில கிரிக்கெட் பிரியர்கள் நண்பர் குழுவாக 1990ஆம் ஆண்டில் தொடங்கியது. தங்களுக்குள் சில தகவல்கள் குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது, இதுபோன்ற தளம் இருந்தால் நல்லது என்று எண்ணி தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் குறித்த தகவல்களை அறிய வேண்டும் எனில் உடனே இந்த தளத்திற்கு செல்லலாம்.
No comments:
Post a Comment