Tuesday 19 March 2013

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 4

நமது ப்ளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி? என்ற தொடரின் வெற்றிகரமான(**) நான்காம் பகுதியை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. இதனுடைய முந்தைய பகுதிகள்:
நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 1
நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 2
நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 3


 Killer Articles:

பரபரப்பான, வாசகர்களை கவரும்விதமான பதிவுகளை தான் Killer Articles என்று அழைக்கிறார்கள். வாசகர்களை கவர்வதற்கு பரபரப்பான பதிவுகள் ஒரு எளிய வழி. எது போன்ற பதிவுகள் அதிகம் படிக்கப்படுகின்றது? என்று எனது கண்ணோட்டத்தில் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். பதிவுகள் பரபரப்பாக இருந்தால் மட்டும் போதாது, பதிவின் தலைப்பும் வாசகர்களை கவரும்விதமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகள் மூலம் வரும் வாசகர்களில் பெரும்பாலானோர் நமது தலைப்பை பார்த்துவிட்டு தான் வருகிறார்கள்.

கவர்ச்சியான தலைப்பு இல்லாத அருமையான பதிவுகளுக்கு திரட்டிகள்  மூலம் வரும் வாசகர்களை விட, கவர்ச்சியான தலைப்புடைய ஒன்றுமில்லாத பதிவுகளுக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் இது ஒருவழி பாதை போல One-Time வாசகர்கள் தான். கவர்ச்சியான தலைப்பிட்டு பதிவில் ஒன்றுமில்லை எனில் அப்படி வந்த வாசகர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.

புதிய வாசகர்களையும் கவர வேண்டும், அப்படி வந்த வாசகர்களையும் நம்முடன் இணைந்திருக்க வேண்டுமெனில், நம்முடைய தலைப்புகளும் கவர்ச்சியாக இருத்தல் வேண்டும், அது போலவே நமது பதிவுகளும் தலைப்புக்கு ஏற்றவாறும், வாசகர்களை கவரும் விதமாகவும் இருத்தல் வேண்டும்.

ஆனால் இன்னொரு வழியும் இருக்கிறது. ஒன்றுமில்லாத பதிவையும், கற்பனைவளத்தால் (Creativeness) வாசகர்களை கவரும் பதிவுகள். அதற்கு நல்ல உதாரணம், நண்பர் தல தளபதி அவர்களின் அதிக ஹிட்ஸ் பெறுவது எப்படி? என்ற பதிவு.

இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. வாசகர்களை கவர்கிறேன் என்று எப்பொழுதும் இது போன்ற பதிவுகளையே பதிவிட்டு வந்தால், ஒரு சமயத்தில் அது வாசகர்களுக்கு அலுப்பைத் தந்து விடும். ஆகவே அவ்வப்போது இது போன்ற பதிவுகளை எழுதினால் போதுமானது.

ஆகவே, பதிவை எழுதிய பின் அதற்கு தலைப்பிடுவதையும் கவனத்தில் கொள்ளவும்.

டிஸ்கி - ஒன்னு:

**வெற்றிகரமான - நான் ஏன் இப்படி குறிப்பிட்டுள்ளேன்? என்றால், இது எனது முதல் தொடர் பதிவு. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு வரியில் சொல்லக் கூடியதை ஒரு பதிவாகவே எழுதுவதில் எவ்வளவு கஷ்டம்(????) என்பது அனுபவித்தால் தான் புரியும். அந்த கஷ்டங்களையெல்லாம்(!!!) தாண்டி நான்காவது பகுதியை எழுதுவதால் "வெற்றிகரமான" என்று குறிப்பிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz