Saturday 18 May 2013

பவர்பாய்ண்ட்: பயன்தரம் சில குறிப்புகள்

கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் இன்று கலந்தாய்வுகள் மற்றும் விளக்கக் கூட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பவர்பாய்ண்ட் தொகுப்பாகும்.
பல காட்சித் தோற்றங்களை கருத்துக்கேற்றபடி உருவாக்கிப் பார்ப்பவர் மனதில் நம் கருத்துக்களைப் பதியச் செய்வதற்கு இதனைத் திறமையோடு பயன்படுத்தினால் போதும். கருத்துக்களை, சொல்லவரும் செய்திகளை, திட்டவரை வுகளை, விரிவுகளை எழுத்துக்கள் கோர்வையாக டாகுமெண்ட் தயாரித்து வழங்குவது ஒரு ரகம். அவற்றையே சிறிய வரை படங்களாக, முக்கிய விஷயங்களின் கோர்வையாக, விதம் விதமான வண்ணங்களில் காட்டுவது இன்னொரு ரகம்.
கேட்பவர் மனதில் பார்ப்பதன் மூலமாக அவர்கள் மனதில் நம் கருத்துக்களைப் பதிய வைப்பது இரண்டாவது ரகமே. அதற்கு உதவும் அருமையான அப்ளிகேஷன் புரோகிராம் எம்.எஸ். ஆபீஸில் உள்ள பவர்பாய்ண்ட்.
பவர்பாய்ண்ட் தொகுப்பை இயக்குவது எளிது. அனைத்து நிலைகளிலும் என்ன செய்யலாம் என்பதற்கு ஆங்காங்கே குறிப்புகள் இருக்கும். இவற்றை அறிந்து கொள்ளுமுன் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்புடன் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களைக் காணலாம்.
ஸ்லைட் �ஷா (Slide Show): முழுமையாக அமைக்கப்பட்ட ஒரு பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு. இதனை இயக்குபவர் கண்ட்ரோல் செய்திடலாம்; அல்லது தானாக இயங்குமாறும் செட் செய்திடலாம்.  ஸ்லைட் (Slide): ஸ்லைட் �ஷாவில் ஒரு திரைத் தோற்றத்தில் காணப்படும் காட்சி.
பிரசன்டேஷன் பைல் (Presentation File): அனைத்து ஸ்லைட்கள், ஸ்பீக்கர் நோட்ஸ், பார்ப்பவர்களுக்கு உதவி புரிய தயாரித்து வழங்கப்படும் ஹேண்ட் அவுட்கள் மற்றும் சார்ந்த அனைத்தும் சேர்ந்தவற்றையே பிரசன்டேஷன் பைல் என அழைக்கின்றனர்.
ஆப்ஜெக்ட் (Object)    பவர்பாய்ண்ட் ஸ்லைடில் இடம் பெறும் அனைத்தும் ஆப்ஜெக்ட் என அழைக்கப்படுகின்றன. அது கிளிப் ஆர்ட், டெக்ஸ்ட், டிராயிங்ஸ், சார்ட்ஸ், ஸ்பீச், ஒலி, வீடியோ கிளிப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ட்ரான்சிஷன் (Transition): ஸ்லைட் �ஷாவின் போது ஒரு ஸ்லைடை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் எபக்ட். ஒன்று தேய்ந்து இன்னொன்று வருவது அல்லது முற்றிலுமாக மறைந்து புள்ளிகளாகத் தோற்றமெடுத்து பின் அமைவது போன்ற வற்றைக் கூறலாம். இனி ஒரு ஸ்லைடை எப்படி உருவாக்குவது என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.
1. பவர்பாய்ண்ட் திறக்கப்படும்போதே புதிய பிரசன்டேஷன் ஒன்றுடன் திறக்கப்படும். புதிய டைட்டில் ஸ்லைட் ஒன்று கிடைக்கும். அல்லது ஏற்கனவே நீங்கள் பவர்பாய்ண்ட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தால் “Create a New Presentation Link” என்பதில் கிளிக் செய்து திறக்கலாம்.
2. கிடைக்கும் புதிய விண்டோவில் Blank Presentation  என்பதில் கிளிக் செய்தால் ஸ்லைட் லே அவுட் விண்டோ திறக்கப்படும். இதில் உங்களுக்குப் பிடித்த லே அவுட்டினை தேர்ந்தெடுத்து அமைக்கலாம். தேர்ந்தெடுத்த லே அவுட் உடனே கிடைக்கப்பெற்று உங்கள் ஸ்லைட் �ஷாவினை நீங்கள் அமைத்திட பவர்பாய்ண்ட் தயாராக இருக்கும்.
3. அடுத்ததாக ஸ்லைடில் டெக்ஸ்ட் அமைத்தல். டைட்டில் டெக்ஸ்ட் பாக்ஸில் கிளிக் செய்தால் ஒரு திக் கிரே பார்டர் கிடைக்கப் பெற்று அது தயார் என்பதைக் காட்டும். அதில் டெக்ஸ்ட் டைப் செய்திடலாம். அடுத்ததாக சப் டைட்டில் டெக்ஸ்ட் பாக்ஸிலும் டைப் செய்திடலாம். இப்போது முதல் ஸ்லைடை உருவாக்கி விட்டீர்கள்.
4. அடுத்த ஸ்லைடை எப்படி உருவாக்குவீர்கள்? இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் நியூ ஸ்லைட் என்பதின் மேல் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் ஸ்லைடில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் முன்பு போல டெக்ஸ்ட் அமைக்கலாம்.
5. இப்படியே பல ஸ்லைடுகளை உருவாக்கி பிரசண்டேஷன் பைலை முடித்துவிடலாம். இனி ஏதாவது ஒரு ஸ்லைடில் மாற்றம் செய்திட வேண்டும் என்றால் மேலாக உள்ள இரு அம்புக் குறிகளை அழுத்தினால் முன் அல்லது பின் உள்ள ஸ்லைடுகள் கிடைக்கும். அதில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். முடிவில் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்தால் எளிமையான ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயார்.
ஸ்லைட் பிரசன்டேஷன் தயார் செய்திட உதவியுடன் கூடிய வழி ஒன்றைத் தருகிறது. அதற்கு Auto Content Wizard  என்று பெயர். தொடக்க நிலையில் பவர்பாய்ண்ட் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல உதவியை வழங்குகிறது. அதன் வழியாக எப்படி ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயார் செய்திடலாம் என்று பார்ப்போம்.
1. பவர்பாய்ண்ட் திறந்தவுடன் File மெனு கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் New  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் AutoContent Wizard என்பதில் கிளிக் செய்திடவும். இனி இந்த விஸார்ட் உங்களுக்கு உதவிடும்.
2. முதலில் விஸார்டில் உள்ள செய்திகளைப் படித்து தெரிந்து கொண்ட பின் Next கிளிக் செய்திடவும்.
3. அடுத்து வரும் டயலாக் பாக்ஸில் எந்த மாதிரி பிரசன்டேஷன் தேவை என்பதனை முடிவு செய்து தேர்ந்தெடுக்கவும்.இப்படியே ஒவ்வொரு விண்டோவிலும் நீங்கள் விரும்பும் தோற்றம் மற்றும் வழியினைத் தேர்ந்தெடுத்து பின் இறுதியாக Finish என்பதனைக் கிளிக் செய்து முடித்துவிட்டால் உங்களுக்கான பிரசன்டேஷன் பைல் அவுட்லைனாகக் கிடைக்கும். இதில் நீங்கள் அமைத்திட வேண்டிய டெக்ஸ்ட், படம் முதலியவற்றை அமைத்து பின் சேவ் செய்து இயக்கலாம்.
இப்படியே ஒவ்வொரு முறையும் டூல்கள் உள்ள மெனுக்களைக் கிளிக் செய்து ட்ரான்சிஸன் எபக்ட் கொடுத்தல், ஒலி இணைத்தல், படம் இணைத்தல் ஆகிய செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.
தயாரித்தவர் மற்றும் பைல் தகவல்கள் அமைக்க:
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் தயார் செய்திடுகையில் அந்த பைலை யார் தயார் செய்தது, எந்த பொருள் குறித்து, பைல் வகை என்ன போன்ற பிற தகவல்களை இதற்கான இடத்தில் நாம் போட்டு வைக்கலாம். ஆனால் நம்மில் பலர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துவதே இல்லை. பைலை முடித்தவுடன் அதனைப் போட்டுப் பார்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவே விரும்புவோம். அந்த புரோகிராமே நம்மை இந்த தகவல்களைச் சேர்க்கச் சொல்லி நினைவுபடுத்தும் வகையில் இதனை நாம் செட் செய்திடலாம். முதலில் “Tools” “Options”  செல்லவும். Oணீtடிணிணண் அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் Options என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “Save” என்னும் டேபைக் கிளிக் செய்தால் இன்னும் ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உள்ள பல பிரிவுகளில் “Save options”  என்பதனைத் தேடிக் காணவும். இதில் “Prompt for file properties” என்பதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் பின் ஒவ்வொரு முறை பைலை சேவ் செய்திடும்போதும் பைலுக்கான தகவல்களை நிரப்பும்படி பவர்பாய்ண்ட் உங்களை நினைவு படுத்தும்.
பவர்பாய்ண்ட்: ஷார்ட் கட் கீகள்
Ctrl + N: புதிய பிரசன்டேஷன் பைல் ஒன்றைத் திறக்க
Ctrl +O:  ஏற்கனவே உள்ள பிரசன்டேஷன் பைலைத் திறக்க
Ctrl +W: பிரசன்டேஷன் பைல் ஒன்றை மூடிட
Ctrl +S: பிரசன்டேஷன் பைலை சேவ் செய்திட
Alt + F4:  பிரசன்டேஷன் தொகுப்பையே மூடிட
அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல பல கீகள் உள்ளன. அவை:
N, ENTER, PAGE DOWN, RIGHT ARROW, DOWN ARROW, or SPACEBAR : அல்லது மவுஸ் கிளிக் செய்திடலாம்.
முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல அல்லது முந்தைய அனிமேஷன் இயங்க: P, PAGE UP, LEFT ARROW, UP ARROW, or BACKSPACE. குறிப்பிட்ட ஸ்லைடிற்குச் செல்ல (number+ ENTER) அந்த ஸ்லைடின் எண்ணையும் என்டர் கீயையும் அழுத்தவும். கருப்புதிரையைக் காட்டவும் கருப்புத் திரையிலிருந்து ஸ்லைட் �ஷாவிற்குச் செல்ல  B or PERIOD (புள்ளி) வெள்ளை திரையைக் காட்டவும் வெள்ளைத் திரையிலிருந்து ஸ்லைட் �ஷாவிற்குச் செல்லவும் W or COMMA (காற்புள்ளி)
ஆட்டோமேடிக் ஸ்லைட் �ஷாவினை நிறுத்தவும் அல்லது மீண்டும் தொடங்கவும் S or PLUS SIGN ஸ்லைட் �ஷாவினை முடிக்க : ESC, CTRL+BREAK, or HYPHEN

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz