Thursday 18 April 2013

பிளாக்கரில் கூகிள் அட்சென்ஸ் இடுவது எப்படி?

நான் இங்கு பிளாக்கரில் கூகிள் அட்சென்ஸ் இடுவது எப்படி என்பதனை விளக்க போகிறேன்.பிளாக்கரில் கூகிள் அட்சென்ஸ் இணைப்பதற்கு இரு வழிகள் உள்ளன.முதல் வழி பிளாக்கரில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்சன் மூலமாகவே அட்சென்ஸ் இட்டுக்கொள்ளலாம்.இரண்டாம் வழி கூகிள் அட்சென்ஸ் பக்கத்திற்கே சென்று ஆட் உருவாக்கி கொள்வது.

அதற்கு முன்பு எவ்வளவு அட்சென்ஸ் ஒரு பிளாக்கரில் வைக்க முடியும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.மொத்தம் ஆறு ஆட்ஸ் தான் உள்ளே வைக்க முடியும்.அதிலும் AD UNIT மூன்றும் LINK UNIT மூன்றும் தான் வைக்க வேண்டும்.அதற்குமேல் வைத்தாலும் அதிகமாக உள்ளவை மறைந்தே இருக்கும்.

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் படத்தின் மூன்றாவது பகுதிவரையில் இரண்டு வழிகளுமே சமம்தான்.

பிளாக்கரில் உள்ள ஆப்சன் மூலம்,

பிளாக்கரிலேயே கொடுக்கப்பட்டுள்ள ஆப்சன் மூலம் அட்சென்ஸ் இடுவது என்பது மிகவும் எளிமையான ஓன்று.உங்களுக்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் படமாக இட்டும் காட்டியுள்ளேன்.நான் எழுதியிருப்பதை படிக்க படிக்க படத்தினையும் பார்த்துக்கொண்டால் அனைத்தும் எளிதில் விளங்கும்.படம் தெளிவாக தெரியவில்லை என்றால் படத்தின் மீதி கிளிக் செய்தால் படம் பெரிதாகி தெளிவாக காட்சியளிக்கும்.



படி 1 : முதலில் நீங்கள் Design கிளிக் செய்துகொள்ளவேண்டும்.

படி 2 : இப்போது பகுதி இரண்டில் உள்ளது போன்ற ஒரு பக்கம் திறக்கும்.அங்கு Blog Posts என்று நடுவில் உள்ள பெட்டிதான் நாம் இடும் பதிவுகள் தோன்றும் இடமாகும்.Add a Gadget என்பதுதான் நமக்கு தேவையானவற்றை பிளாக்கரில் அமைப்பதற்கு தேவையான ஆப்ஷன்கள் உள்ள பகுதி ஆகும்.இப்போது Add a Gadget கிளிக் பண்ணவும்.

படி 3 : Add a Gadget கிளிக் செய்தவுடன் ஒரு புதிய பாப்அப் விண்டோ பகுதி 3 ல் உள்ளது போல் திறக்கும்.அதில் காணப்படும் Adsense என்பதுதான் நமக்கு தேவையான ஆட் உருவாக்கும் பகுதியாகும்.அதே பக்கத்தில் Html/Java Script என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தான் கூகிள் அட்சென்ஸ் பக்கத்திற்கே சென்று ஆட் உருவாக்கி பிளாக்கரில் இடவேண்டிய இடம் ஆகும்.இப்போது Adsense என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 4 : இப்போது பகுதி 4 ல் உள்ளது போல் பக்கம் வரும்.அங்கு Format ல் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் நமக்கு தேவையான அளவுள்ள ஆட் தேர்வு செய்துகொள்ளலாம்.Color ல் உள்ள ஆப்சன் பயன் படுத்தி ஆட் இன் எழுத்துக்கள்,தலைப்புகள் மற்றும் பேக்ரௌன்ட் இவற்றின் கலர்களை நமது பிளாக்கிற்கு செட ஆகும் படி அமைத்திக்கொள்ளலாம்.Preview என்பது நாம் ஆட் ன் கலர் மற்றும் அளவுகளை மாற்றும் போது அது எப்படி வரும் என்பதற்கான மாதிரியை நமக்கு காண்பிக்கும் பகுதியாகும்.

இறுதியாக உள்ள Submit அல்லது Save கிளிக் செய்தவுடன் நீங்கள் தற்போது உருவாக்கிய ஆட் தங்கள் பிளாக்கரில் தெரிய ஆரம்பித்து விடும்.அந்த ஆட் பெட்டியினை எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.பிறகு எடிட் செய்தும் கொள்ளலாம்.

கூகிள் அட்சென்ஸ் பக்கத்திற்கே சென்று,



படி 1 : உங்களின் அட்சென்ஸ் அகௌண்டில் லாகின் செய்தவுடன் அங்கு உள்ள Adsense Setup என்று உள்ள தலைப்பினை கிளிக் செய்து கொள்ளவும்.பிறகு அங்கு திறக்கும் பக்கத்தில் Get Ads என்று இருப்பது புதியதாக அட்சென்ஸ் யூனிட் ஒன்றினை உருவாக்குவது ஆகும்.Manage Ads என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆட் யூனிட்களை காணவும் மாற்றியமைக்கவும் உதவும் பக்கமாகும்.முதலில் நீங்கள் ஆட் யூனிட் உருவாக்க Get Ads கிளிக் செய்து Adsense For Content கிளிக் செய்து கொள்ளுங்கள்.

படி 2 : இப்போது பகுதி 2 ல் உள்ளது போல் ஒரு பக்கம் திறக்கும்.அங்கு நமக்கு ஆட் யூனிட் வேண்டுமா அல்லது லிங்க் யூனிட் வேண்டுமா என்று செலக்ட் செய்து கொண்டு கண்டினியூ கொடுக்க வேண்டும்.

படி 3 : இங்கும் பிளாக்கரில் ஆட் யூனிட்டிற்கு கலர் மற்றும் அளவுகள் கொடுப்பது போலவே கொடுத்து கண்டினியூ கொடுக்க வேண்டும்.இங்கு நாம் உருவாக்கிய ஆட் யூனிட்டின் மாதிரி வடிவம் பார்க்க Preview This Adsense Unit பண்ணவேண்டும்.

படி 4 : பிறகு 4 வது பகுதியில் உள்ளது போல்வரும் பக்கத்தில் ஒன்றும் பண்ணாமல் கண்டினியூ கொடுத்துவிட்டு.அடுத்ததாக வரும் பக்கத்தில் நாம் தற்போது உருவாக்கும் ஆட் யூனிட்டினை எந்த பிளாக்கில் இட போகிறீர்களோ அதான் பெயரையே NAME ல் கொடுத்து Submit And Get Code கிளிக் செய்தவுடன் அங்கு கொடுக்கப்படும் கோட்டினை காப்பி செய்து கொள்ளவும்.

படி 5 : முதல் படத்தின் மூன்றாவது பகுதிவரையில் தொடர்ந்து கொள்ளுங்கள்.பிறகு அங்கு உள்ள Html/Java Script கிளிக் செய்து அங்கு வரும் பெரிய பெட்டியில் தாங்கள் காப்பி செய்து வைத்துள்ள கோடினை இட்டு SAVE கிளிக் செய்த பத்து நிமிடங்களில் அந்த ஆட் யூனிட் உங்கள் பிளாக்கரில் தெரிய ஆரம்பித்துவிடும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz