Sunday 14 April 2013

கணணியில் மென்பொருள்களை மறைப்பதற்கு!

கணணியில் மென்பொருள்களை
பொது இடங்களில் கணணியை பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்னை, தான் திறந்து வைத்திருக்கும் மென்பொருளை யாராவது பார்த்து தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான்.
யாராவது வரும் போது மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்ளலாம். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.

Hide It: மிக எளிமையான நிறுவத் தேவையில்லாத மென்பொருள் இதுவாகும். இதன் மூலம் டெஸ்க்டொப்பில் இருக்கும் ஐகான்களைக் கூட மறைத்து வைக்கலாம்.
முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று இந்த மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் Task barஇல் இந்த மென்பொருளுக்குரிய ஐகான் தோன்றும்.
இந்த ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக அல்லது அனைத்து மென்பொருளையும் விநாடியில் மறைக்கலாம்.
இதன் இன்னொரு வசதி தேவையான புரோகிராம்களை மறைத்து விட்டு இந்த மென்பொருளையும் Exit கொடுத்து மூடி விடலாம். அதன் பின் சிறிது நேரம் கழித்து இந்த மென்பொருளைத் திறந்து மறைந்துள்ள புரோகிராம்களைத் திறந்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz