நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கிவிட்டீர்களா ? மறக்காமல் உங்கள் லேப்டாப் Restore Recovery DVD ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள்...
நீங்கள் புதிதாக வாங்கி இருக்கும் லேப்டாப்பில் Windows XP, Windows Vista, Windows 7 என ஏதாவது ஒரு OS அதாவது Operating System இன்ஸ்டால் செய்து இருக்கும்.
அந்த
ஆபரேட்டிங் சிஸ்டாம் திடீரென வேலை செய்யாமல் போய் எரர் ஆகிவிட்டதன்
காரணமாக உங்கள் லேப்டாப் திறக்க முடியாமல் போய்விட்டால் அதனை சரி செய்ய
உங்களுக்கு அந்த லேப்டாப்பில் எற்கனவே இன்ஸ்டால் செய்து உள்ள ஆபரேடிங்
சிஸ்டத்தை போல ஒரு Restore Recovery DVD இருந்தால்தான் அதனை சரி செய்ய முடியும். இல்லை என்றால் பிரச்சனைதான்.
முன்பெல்லாம் நாம் எந்த பிராண்ட் லேப்டாப் வாங்கினாலும் அந்த லேப்டாப் பேக்கில் ஒரு Drivers CD மற்றும் Windows Recovery CD இரண்டும் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி வருவதில்லை. Recovery File நம் லேப்டாப்பிலேயே தனியாக ஒரு டிரைவராக காப்பி செய்து வைக்கப்பட்டு இருக்கிறது. அது தேவை என்றால் நாம் தான் அதனை ஒரு ரிகவரி Cdயாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சரி அந்த Restores Recovery DVD ஐ நாம் எப்படி நம் லேப்டாப்பில் இருந்தே உருவாக்கிக்கொள்வது என்பதை நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.
இந்த பாடத்தை PDF பைலாக கீழே உள்ள லிங்கின் மூலம் டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்
No comments:
Post a Comment