Thursday 21 March 2013

Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?


கடந்த முறை Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவை எழுதிய போது நிறைய நண்பர்களுக்கு அதில் இருக்கும் ஆர்வம பற்றி தெரிய வந்தது. அதிலும் நிறைய பேரின் கேள்வி "Paypal கணக்கில் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை Transfer செய்வது எப்படி?". எப்படி என்று இன்று பார்ப்போம்.
http://4.bp.blogspot.com/-1cblB5HZTqs/UF_6eWdcpCI/AAAAAAAAIvM/YzBVKXPRNtc/s200/paypal+to+bank+account.png


Paypal பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ள Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவை படியுங்கள்

பணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும்

1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும்

2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள்.  அதில் "Withdraw funds to your bank account" என்பதை கிளிக் செய்யுங்கள்

http://3.bp.blogspot.com/-cNjhFhiksJA/UF_2ocH2jaI/AAAAAAAAIuo/A2uuuAIoSMc/s320/withdraw+funds+to+your+bank+account.png


இப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும்

http://4.bp.blogspot.com/-JFEasWrNiik/UJNZS1DVWUI/AAAAAAAAJaM/zeH9--9BaCM/s400/withdraw+funds.png


இதில்

From this balance - உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.


Amount - நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.


To - எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள் கொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள் நாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.


Purpose code - என்ன காரணத்திற்கு பணம் Transfer செய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து விடலாம். அல்லது உங்கள் விருப்பம்)

இவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.

இந்தியாவை சேர்ந்தவர்கள் இதை செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz