Tuesday 19 March 2013

Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?

கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive - இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும்.
http://2.bp.blogspot.com/-vKDMm5Nk0mk/UCvRtatxJjI/AAAAAAAAIFQ/_Hk9TloZ3SM/s200/symmover-icon.pngகுறிப்பிட்ட Software - uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம்


இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்அதை இன்ஸ்டால் செய்த உடன், Start Menu- வில் சென்று ஓபன் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு வரும்

http://4.bp.blogspot.com/-7SWxVf4Moy8/UCvKbZIX4mI/AAAAAAAAIEg/VFWBk9Gt0Y8/s320/symmove+1.png

அதில் + என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்த மென்பொருட்கள் அனைத்தும் வரும்

http://4.bp.blogspot.com/-k8ocTzCY2_k/UCvK6eqq0sI/AAAAAAAAIEo/O0gF_EeWpqE/s320/symmove+2.png

எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்யவும். ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இப்போது கீழே படத்தில் உள்ள பச்சை நிற அம்புக் குறி போன்றதில் கிளிக் செய்ய வேண்டும்

http://4.bp.blogspot.com/-Vgf0EdbI-HI/UCvMrvXBVJI/AAAAAAAAIEw/UpBwkO9kWQE/s320/symmove+3.png

மென்பொருளின் சைஸ் பொறுத்து சில நிமிடங்களில் Move ஆகி விடும்


http://1.bp.blogspot.com/-yX1WAoi-gBE/UCvNwqAr5-I/AAAAAAAAIE4/b_PgHmb5nmQ/s320/symmove+4.png


இது உங்கள் D டிரைவில் SymMover என்ற Folder-இல் இருக்கும். Destination Folder மாற்ற விரும்பினால் கடைசியில் இருந்து இரண்டாவதாக உள்ள Settings Icon   மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் Add என்பதை கிளிக் செய்து புதிய Destination தெரிவு செய்யலாம்.  

http://4.bp.blogspot.com/-o2MUixlDg6I/UCvQZAC61cI/AAAAAAAAIFI/I_evIIFgV2o/s320/symmove+6.png

Move ஆன பின்பும் உங்கள் மென்பொருள் பழையபடி இயங்கும்.

நன்றிZero Mania
- See more at: http://www.karpom.com/2012/08/Move-Windows-Software-To-Another-Hard-Drive.html#sthash.B5kRZ0b0.dpuf


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz