Monday 11 March 2013

விண்டோஸ் ரகசியங்களுடன் ஓர் பயணம் பகுதி - I

மயமாகும் டாக்ஸ்பார்
     தங்களின் விண்டோஸ் கணினியில் டாக்ஸ்பார் செட்டிங்க்ஸில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தங்களின் விண்டோவில் டாக்ஸ்பாரினை (TASKBAR) மறைத்து வைக்கலாம். கவலை வேண்டாம் தங்களின் மவுஸ் கர்சரை டாக்ஸ்பார் இருந்த இடத்தில் வைத்தால் தானாக டாக்ஸ்பார் தோன்றும், தங்களின் மவுஸ் கர்சரை அங்கு இருந்து எடுத்துவிட்டால் மீண்டும் மாயமாகும்.
     இதனை மேற்கொள்ள தங்களின் டாக்ஸ்பாரின் மீது மவுஸ் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து PROPERTIES என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் திரையில் (AUTO HIDE) என்பதில் டிக்(TICK) மார்க்கை ஏற்படுத்தி பின்னர் APPLY , OK என தரவும்.



நினைத்த இடத்தில் தங்களின் டாக்ஸ்பார் :

      ணினி விண்டோவில் இடது, வலது. மேல்,கீழ் என தங்களின் விருப்பத்திற்கு டாக்ஸ்பாரினை மாற்றியமைத்து கொள்ளலாம், மேலும் வேண்டிய சைஸையும்(SIZE) மாற்றியமைக்கலாம். இதனை மேற்கொள்ள டாக்ஸ்பாரின் மீது ரைட்கிளிக் செய்து, PROPERTIES என்பதனை கிளிக் செய்யவும். 
     பின்னர் LOCK THE TASKBAR என்பதில் உள்ள டிக்(TICK) அடையாளத்தை நீக்கவும். பின்னர் தங்களின் டாக்ஸ் பாரினை மவுஸ் கர்சரை கொண்டு டிராக்(DRAG) செய்து, வேண்டிய இடத்தில் விட்டு விடுங்கள், அவ்வளவு தான். பின்னர் மீண்டும் டாக்ஸ்பார் PROPERTIES கிளிக் செய்யவும். பின்னர் LOCK THE TASKBAR என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz