Saturday 16 March 2013

பிளாக்கிற்கு ஏன் டொமைன் பெயர்(.com .net .org) வாங்க வேண்டும் அதன் அவசியம் என்ன?

http://anbhudanchellam.blogspot.in/2011/09/com-net-org.htmlபெரும்பாலான பதிவர்களிடம் உள்ள ஒரு கேள்வி நாம் ஏன் .com வாங்க வேண்டும் ஓசியில கிடைக்குறத விட்டுட்டு நாம் எதற்க்காக பணம் செலவழித்து டொமைன் வாங்க வேண்டும் அதை வாங்கினால் நமக்கு என்ன பயன் இப்படி பல்வேறு வகையான சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. நாம் ஏன் .காம் வாங்க வேண்டும் என்று கீழே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். அதை படித்து பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள் .காம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று.

1) உழைப்பை வீணாக்காதீர்
நண்பர்களே நீங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து இணையத்தில் இருந்தோ அல்லது நீங்கள் அனுபவித்த தகவல்களையோ சேகரித்து பதிவாக போடுகிறீர்கள். உங்களுடைய பிளாக் அடைந்த வளர்ச்சி முழுக்க முழுக்க உங்களின் உழைப்பினால் உருவானது. உங்கள் பிளாக்கிருக்கு கிடைத்த வெற்றி என்பது உங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால் நீங்கள் எவ்வளுவு பெரிய வளர்ச்சிக்கு உங்களின் blogspot தளத்தை உருவாக்கினாலும் அந்த பிளாக் உங்களுக்கு தான் சொந்தம் இதில் யாரும் சொந்த கொண்டாட முடியாது என்று உங்களால் கூற முடியாது. நாளைக்கே திடீரென blogger தளம் மூட பட்டால் உங்களின் வருடக்கனக்கான உழைப்பு ஒரே நாளில் வீணாகி விடும். பின்பு நீங்கள் திரும்பவும் 0 வில் இருந்து ஆரம்பித்து இந்த நிலையை அடைவது மிகவும் கடினம். ஆனால் உங்களுடைய தளம் .Com ஆகா இருந்தால் பிளாக்கர் தளம் முடக்கப்பட்டாலும் நீங்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை வேறு ஏதாவது ஹோஸ்டிங் உபயோகித்து நம் பிளாக்கை நடத்தலாம். உங்களுடைய வாசகர்களை நீங்கள் இழக்க வேண்டியதில்லை. மற்றும் உங்களுடைய வருட கணக்கான உழைப்பும் வீணாகாது.

2) பணம் அதிக செலவாகாது:
டொமைன் பெயர் வாங்கினால் நாம் அதிகம் செலவழிக்க வேண்டும் மாதம் மாதம் பணம் கட்டியாக வேண்டும் அப்படின்னு நினைக்க வேண்டாம். இந்த டொமைன் வாங்க நீங்கள் அதிக பட்சம் வருடத்திற்கு 500 செலவழித்தால் அதுவே அதிகம். அப்படி என்றால் ஒரு நாளைக்கு எவ்வளுவு பாருங்கள் 2 ரூபாய்க்கும் குறைவாக தான் வரும். எதேதுக்கோ வீண் செலவு செய்யும் உங்களுக்கு இது ஒரு தொகையே இல்லை. ஆகவே சிறிது பணத்தை பொருட்படுத்தாமல் டொமைன் பெயர் வாங்கி விடுவது சிறந்தது.


3) ஹாக் செய்தாலும் கவலை இல்லை:
நீங்கள் பிளாக்கை நடத்தி கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு வேண்டாதவர் யாரோ உங்களுடைய பிளாக்கை ஹாக் செய்து விடுகிறார்கள் என வைத்து கொள்வோம் உங்களுடைய டொமைன் பெயர் வேறொரு ஐடியில் இருந்தால் போதும் எத்தனை முறை ஹாக் செய்தாலும் நீங்கள் வேறொரு பிளாக் ஆரம்பித்து இந்த டொமைன் பெயரை உபயோகித்து கொள்ளலாம். இதனால் உங்களின் அலெக்சா ரேங்க் மற்றும் STATS ஆகியவற்றில் பெரிய மாற்றம் ஏற்படாது. ஆனால் நீங்கள் பதிவுகளை Backup எடுத்து வைத்திருப்பது அவசியமாகிறது.

4) வாசகர்கள்,பாலோயர்ஸ் இழக்க நேரிடுமா
நீங்கள் உங்கள் பிளாக்கின் URL மாற்றுவதால் பழைய வாசகர்களுக்கு தெரியாமல் போய்விடும் என நினைக்க வேண்டாம். உங்களுடைய பழைய URL கொடுத்தால் புதிய பிளாக் வரும்படி Redirect செய்து கொள்ளலாம். Google மூலம் டொமைன் வாங்கினால் இதை கூட நாம் செய்ய வேண்டியதில்லை அவர்களே செய்து கொடுத்து விடுவார்கள். இதனால் நீங்கள் உங்களின் வாசகர்களையும், பின்தொடர்பவர்களையும் இழக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களின் நண்பர்கள் உங்களுடைய பிளாக்கின் பழைய முகவரியை கொடுத்து Bloglist பகுதியில் சேர்த்து இருந்தால் உங்களுடைய புதிய தளத்தின் அப்டேட்ஸ்கள் அவர்களுக்கு செல்லாது. அவர்களிடம் மட்டும் புதிய URL மாற்றி கொள்ள சொல்ல வேண்டும்.


5)கூகுள் மூலம் டொமைன் வாங்கினால் கிடைக்கும் சில கூடுதல் வசதிகள்:
பிளாக்கர் பதிவர்கள் சுலபமாக டொமைன் வாங்க ஏதுவாக உங்களின் பிளாக்கர் தளத்திலேயே டொமைன் வாங்கும் வசதியை கூகுள் கொடுத்துள்ளது. அதன் மூலம் நீங்கள் டொமைன் வாங்கினால் $10 செலவழிக்க  வேண்டும். மற்றும் இதில் கூடுதல் வசதியாக உங்கள் டொமைன் பெயரில் 10 ஈமெயில்(admin@domain.com) ஐடியை உருவாக்கி கொள்ளும் வசதி. மற்றும் sub domain உருவாக்கி கொள்ளும் வசதி என சில கூடுதல் வசதிகளும் வழங்கு கின்றனர். அதுமட்டு மில்லாமல் நீங்கள் டொமைன் வாங்கிவிட்டால் போதும் தானாக Redirect ஆகிவிடும். நீங்கள் எந்த செட்டிங்க்ஸ் செய்ய வேண்டியதில்லை. இதில் உள்ள ஒரே குறை கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தான் கூகுள் மூலம் டொமைன் வாங்க முடியும்.

நண்பர்களே டொமைன் வாங்குவதன் பற்றிய முக்கியத்துவத்தை மேலே பகிர்ந்துள்ளேன். பதிவர்கள் உங்களுக்கு டொமைன் வாங்க வேண்டுமா இல்லையா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கூகுள் மூலம் டொமைன் வாங்குவதாக முடிவு செய்து விட்டால் இந்த பதிவையும் பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz