Thursday 28 March 2013

தோல் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ




தோல் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ
தினசரி வைட்டமின் ஏ எடுத்துக்
கொண்டால் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு புற்றுநோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்
உள்ளது. புற்றுநோயை நிரந்தரமாக தடுக்க மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும்
தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றன.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மனன்ட் என்ற ஆய்வு மையம், புற்றுநோய்
தாக்குதல் பெரும்பாலும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு
மேற்கொண்டுள்ளது.
இதற்காக 70 ஆயிரம் ஆண், பெண்களை தெரிவு செய்து ஆய்வில் இறங்கியது. அவர்களுக்கு
பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
உணவு முறைகள் மாற்றப்பட்டன. குறிப்பாக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர்
வைட்டமின் ஏ சத்தை உணவாகவும் மருந்தாகவும் கொடுத்து ஆராய்ச்சியாளர்கள்
கண்காணித்தனர்.
இவர்களில் பலருக்கு ஏ சத்து குறைவாக வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் அன்றாடம்
வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டவர்களுக்கு தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு
கிடைப்பதை உறுதி செய்தனர்.
அனைத்து விதமான சத்துகளும் அடங்கிய ஊட்ட சத்துள்ள உணவும் இத்தகைய பாதுகாப்பை
அளிப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் ஏ சத்துகள் குறைவாக இருந்தால் தோல்
புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதையும் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக பெண்களை எளிதில் தோல் புற்றுநோய் தாக்காமல் இருக்க வைட்டமின் ஏ
உள்ளிட்ட சரிவிகித ஊட்ட சத்துணவு அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ரெடினால் என்ற வைட்டமின் ஏ மூலப்பொருள்
குறையும் போது புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்த இழப்பை சரிசெய்வதன் மூலம் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து
கொள்ளலாம். பால், கேரட், முட்டை உள்ளிட்டவற்றில் வைட்டமின் ஏ மற்றும் ரெடினால்
மூலப்பொருள் அதிகம் உள்ளது. இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளலாம் என்று
தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz