Friday 15 March 2013

சென்னை மாநகர பஸ் ரூட்டை காட்டும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன்

http://anbhudanchellam.blogspot.in/2012/08/blog-post_9.html


A Mobile Application For MTC Information
எந்த ஒரு தொழில் நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவது என்பது அதன் பயன்பாடுகளை பொருத்து தான் இருக்கிறது.

\அத்தகைய பயன்பாட்டுடன் இங்கே ஒரு புதிய தொழில் நுட்பம். சென்னை எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார் டி.ஸ்கந்தா என்பவர்.

இந்த புதிய அப்ளிக்கேஷனில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் செல்லும் வழி தடங்கள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வாசியான டி.ஸ்கந்தா என்பவர் சென்னை வந்திருந்த போது சரியான பஸ் ரூட் பற்றிய விவரங்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால் இந்த எம்டிசி பஸ் ரூட் மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அப்ளிக்கேஷனில் சென்னை மாநகர பஸ்கள் செல்லும் வழியில் இருந்து அதன் டிக்கெட் விலை முதல்கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்கந்தா சென்னை வந்தபோது மொழியும் தெரியாமல், சரியான பஸ் விவரமும் தெரியாமல் மிக அவதிப்பட்டதால் இப்படி ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

 இந்த சென்னை எம்டிசி இன்ஃபோ அப்ளிக்கேஷனில் பயணம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் கூட கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கந்தாவின் இந்த உபயோகமான படைப்பை ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்ட்ராய்டு புதிய மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியது.

உதாரணத்திற்கு சென்னை ட்ரெய்ன்டிராய்டு மற்றும் சென்னை ட்ரெய்ன் டைம் டேபிள் மூலம் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து மற்ற அனைத்து விவரங்களையும் எளிதாக பெறலாம். இது போல் பஸ் பற்றிய தகவல்களை எளிதாக பெற பெங்களூரை சேர்ந்த டி.ஸ்கந்தா என்பவர் இந்த எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

Download MTC INFO for Android

Download Chennai TRAIN Application

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz